Neyveli 199
Periyar bus 199 - neyveli to chennai...
SUNDAY 3.30pm C.B.S. அப்பாக்கள் தன்னுடய 1st year படிக்கிற college பசங்க, பிள்ளைகள பஸ்ல ஏத்திவிட வந்திருப்பாங்க... பளபளன்னு புதுசா நம்ம பெரியார் வண்டி one and only PP199 , திருவள்ளுவர் டிக்கெட் கவுன்டர் opposite நிக்கும். டிரைவர் கண்டக்டர் வழக்கம் போல ஆவின் ஸ்டால் பக்கத்துல இருக்கிற டீ ஸ்டால் ல தேநீர் வடையுடன்... Boys costume ...புது shoulder bag ...Sport ஷூ ன்னு நெனச்சிகிட்டு ..போட்டுகிட்டு வந்த ஷூ ல VIBGYOR யே இருக்கும் .. Baggy pant , belt - pantukku பெல்டா, Beltuக்கு பேண்ட்டா ன்னே தெரியாது....ஹேர்ஸ்டைல் எல்லாம் டிஸ்கோ கட்டிங்...ஃபங்க் ...கிருதாவுலா...இருடாங்கிறா மாதிரி ரெண்டு parallel lines (definitely alternate interior angles are equal ) ஆயுள் கொறஞ்சிரும்ம்னு தலைக்கு oil ஏ வெச்சிக்கிறதுல்ல.. போதாதைக்கு..காதலன் பட songs வேற..assembled ஸ்பீக்கர்ல..." oorvasi...oorvasi.." பாய்ஸ் in full 😎... டிரைவர் வண்டி ஸ்டார்ட் பண்ணியாச்சு...lateral entries எல்லாம், with in fraction of seconds in their reserved seat. Now Bus inside and outside bye bye சிக்னல்..கிட்டத்தட்ட bus fulla மாணவ மாணவியர் கூட்டம்.. few of them will take their sanyo walk man out from their bag to கம்முன்னு sit man.. எடுத்து . ஹெட் செட் போட்டுகிட்டு 70mm படம் மாமே!......பாட்டவிட வெளியில இருக்கிற சவுண்ட் தான் கும்ன்னு கேக்கும்.. வண்டி ஆர்ச்சி கேட் தாண்டி, காடம்புலியூர்ல ஒரு தமிழ்நாடு பம்பர் லாட்டரி குலுக்கல் ..அப்புறம் பண்ருட்டி ஆர்ச் ஸ்டாப்...பஸ்ஸுக்கு வெளிய seller's குரல் "ப்ளாச்சொல ..ப்ளாச்சொல...வேர்க்கல்ல, வேர்க்கல்ல.. முந்திரி முந்திரி" (seller's mind voice டேய்..எந்திரிடா)..
After panruti bus will be flying பப்பர ..பப்பர.. வண்டி பிச்சிகிட்டு போவும்..கோலியனூர் ..விழுப்புரம் skip... விக்கிர வெலவாசியில...விக்கிரவாண்டி தாண்டி வண்டி திண்டிவனம் stop . now all boys hairs டிஸ்கோ, ஃபங்க் எல்லாம் ..பஞ்சிமிட்டாய் ரேஞ்சுக்கு இருக்கும்.... பயபுள்ளைங்க சீப்புக்குன்னே பாக்கெட் வெச்சுருப்பாங்க ..again seller's voice" கொய்யா கொய்யா..வாட்டர் பாக்கெட்டு..வட்டார் பாக்கெட்டு.."
வண்டி மதுராந்தகம்...அப்புறம் மாமண்டூர் நரசிம்மா விலாஸ் ல நிக்கும்..18 hrs travel பன்னா மாதிரி எல்லாரும் எறங்குவாங்க...80% டீக்கடைல 20% ஹோட்டல்க்குள்ள..
Exclusive tea கட song ..."தண்ணி கொடம் எடுத்து... தங்கம் நீ நடந்து வந்தா.."
Meeting our new college mates or room mates near tea shop who is traveling in other bus from down South. Hello சொல்லகிட்டு இருக்கும்போது..oru senior crossing...now விஜய் ஆக்ஷன் "வணக்ங்கனா..."
Conductor now சென்னைக்கு ஒரு விசில போடு ன்னு போடுவார்...Bus repack ஆயிடுச்சு.."போலாம் ரெய்ய்..."
Now செங்கல்.. பட்டு ஆஸ்பத்திரி stopped ...
Entering chennai... "தாம்பரம் எல்லாம் எறங்குங்க"..
ஒரு குரல்" டேய் மச்சி ..கிண்டி ல எறங்கலாம்டா"..
நண்பன் "டேய் கீழ எறுங்குடா.. எலெக்ட்ரிக் train ல போவோம்"..
"இவனோட பெரிய ராவடி..வாரவாரம் இந்த சர்க்கஸ் வேற.."
Now bus crawling ..சானடோரியம், குரோம்பேட்டை, மவுண்ட், கிண்டி...
கண்டக்டர் "அடுத்து பாரிஸ் தான் நிக்கும் ..சைதாப்பேட்டை எல்லாம் இங்கேயே எறங்கிக்க.."
Finally 199 traveled 199 km and reaches one corner ...அதாம்பா நம்ம parrys corner ❤.
Comments
Post a Comment