Neyveli 199
Periyar bus 199 - neyveli to chennai... SUNDAY 3.30pm C.B.S. அப்பாக்கள் தன்னுடய 1st year படிக்கிற college பசங்க, பிள்ளைகள பஸ்ல ஏத்திவிட வந்திருப்பாங்க... பளபளன்னு புதுசா நம்ம பெரியார் வண்டி one and only PP199 , திருவள்ளுவர் டிக்கெட் கவுன்டர் opposite நிக்கும். டிரைவர் கண்டக்டர் வழக்கம் போல ஆவின் ஸ்டால் பக்கத்துல இருக்கிற டீ ஸ்டால் ல தேநீர் வடையுடன்... Boys costume ...புது shoulder bag ...Sport ஷூ ன்னு நெனச்சிகிட்டு ..போட்டுகிட்டு வந்த ஷூ ல VIBGYOR யே இருக்கும் .. Baggy pant , belt - pantukku பெல்டா, Beltuக்கு பேண்ட்டா ன்னே தெரியாது....ஹேர்ஸ்டைல் எல்லாம் டிஸ்கோ கட்டிங்...ஃபங்க் ...கிருதாவுலா...இருடாங்கிறா மாதிரி ரெண்டு parallel lines (definitely alternate interior angles are equal ) ஆயுள் கொறஞ்சிரும்ம்னு தலைக்கு oil ஏ வெச்சிக்கிறதுல்ல.. போதாதைக்கு..காதலன் பட songs வேற..assembled ஸ்பீக்கர்ல..." oorvasi...oorvasi.." பாய்ஸ் in full 😎... டிரைவர் வண்டி ஸ்டார்ட் பண்ணியாச்சு...lateral entries...