Sevva Shandy
டவுன்ஷிப்னா ...நெய்வேலி டவுன்ஷிப் தான் ..
சந்த நா...செவ்வா சந்ததான்..
காலையில 7 மணிலேந்து night 7 மணி வரைக்கும் சந்த செய்வோம்..
All சைக்கிள்ல்ஸ் Parked outside..inside ..front side....median ...சகட்டு மேனிக்கி..... பூரா நம்ம எடந்தான் டோய்.... சைக்கிள ஸ்டாண்ட் ல போடாம...சைக்கிளுக்கு ஸ்டாண்ட் போட்டு...ஒரு மொக்க பூட்டு போட்டு... சாவி இல்லாமலே தெறக்கும் சிறப்பம்சம் அதுக்கு உண்டு ( cycle lock ). அதுல இன்னொரு விஷேசம் என்னனா ..அந்த lockக் கீழ விழாம இருக்க ஒரு சனல சைக்கிள் mud gaurd ஓட சேத்து கட்டியிருப்பாங்க...சாவியே காரி துப்பும்னா பாத்துக்கோங்களேன்..
Fresh vegetables ah carry panna oru பச்சை+வெள்ளை combila பின்னின பெரிய wire கூடையுடன் entry ...
அந்த சின்ன பாலத்த கிராஸ் பண்றதுக்குல...பூண்டுவேணுமா...புளிவேணுமா..புண்ணாக்கு வேணுமான்னு கத்தி கத்தி நம்ம என்ன வாங்க வந்தோம்ங்கறதேயே மறக்கடிச்சி..கடசீல ஒரு படி மல்லாட்ட வாங்க வெச்சி தான் உள்ள அனுப்புவாங்க..
அங்க மாடுless கட்ட வண்டி ஒன்னு Right angle triangle Hypotenuse Positionla நிக்கும், fully loaded with வாழபழம். (அந்த மாடுங்க எப்படா untie பண்ணுவாங்கன்னு பாத்து பாத்து...பத்து பதினஞ்சு தடவ சாணியே போட்ருக்கும்)
Interestingly IPL AUCTION Starts ..Indian பழம் League....
"நால்ரூபா... "
கூட்டத்துல ஒருத்தர்" அஞ்சிரூவா... "
இன்னொரு குரல் "ஆறுபா...."
அப்படியே பத்து ஓவா வரைக்கும் போகும்... அப்புறம் ஒரு தரம் ரெண்டு தரம்ன்னு சொல்லி தரமான பழத்த தலைல கட்டி விட..கூடயில தூக்கிப்போட்டுட்டு..towards அடுத்த கட ...
கத்திரிக்கா.. வெண்டக்கா.. கேரட்டு ...பீன்ஸ்சு ...தக்காளி...
Fusion வாய்ஸ் ல கேக்கும்...
எந்த பக்கம் போறதுன்னே தெரியாது....
அங்க ஒரு குரல்" இப்படி வாங்க Sirrrr... "
இன்னொரு குரல்... "அண்ணே இப்டி ...இப்டி வாங்க..."
கடசீல ஒரு வழியா தரயில குத்தவெச்சி..ஒரு கடையில .." பீன்ஸ் காகிலோ போடுங்க...தக்காளி ஒண்ணு...வெங்காயம் ரெண்டு கிலோ"ன்னு சொல்லிட்டு ..
"வெல எல்லாம் எப்படி" ..
அதுக்கு அவரு" வெலவாசி எல்லாம் ஏறிபோச்சு சார் ..load ஏ வரமாட்டிங்குது ".
ஆனால் பத்து லாரி பின்னாடி நிக்கும்.
Keeper தராசு தட்ட அப்படியே பீன்ஸ் ஏரியாவுல விட்டு ஒரு அல்லு அள்ளுவார்.... கால்கிலோ கல்ல அந்த பக்கம் தட்டுல வெச்சி , நிறுத்தி...."சரி சரி கூடய காமீங்க.."ன்னு சொல்லிட்டு Mr Beans ah கூடயில கொட்டிட்டு ..வெங்கயா ஏரியாக்கு .அதே ட்ரீட்மெண்ட் .. இந்த தடவ ரெண்டு கிலோ கல்லு அந்த தட்ல...
அற ,ஒண்ணு ,ரெண்டு கிலோ கல்லு எல்லாம் உக்காந்துகிட்டு இருக்குற சாக்கு துணிக்கு அடியில , கரன்சி நோட்டு coins ஓட இருக்கும்.
கல்லுதானே தராசுக்கு password .
இப்ப wire கூட .."BOOK MY SHOW " Filling fast statusக்கு வந்துடிச்சி ....
வெயில் மண்டைய பொளக்க, தாகத்துக்கு சர்பத் ஜூஸ் கட...
பன்னீர் சோடவ வருசயா அடிக்கி வெச்சி..அது தலையில லெமன்அ topping பண்ணி ..கலர் கலர் ஆ பாட்டில்ஸ வரிசையா அடுக்கி வச்சு..ஒரு complete display காட்சி ...
Floral டிசைன்ல ஒரு கண்ணாடி டம்ளர்( mostly orange in color ) ....பக்கத்துல தெர்மாகோல் டப்பாவுல ஐஸ் flakes இல்ல , ஐஸ் blocks இருக்கும்.. அதுக்குன்னு ஒரு கரண்டி ..மெகா டேபிள் ஸ்பூன். கட keeper டப்பாவுல கைய விட்டு ஒரு ஐஸ் கட்டிய எடுத்து left hand la வெச்சி ..கரண்டியால ஒரே அடி..பாதி கண்ணாடிக்குள்ள விழும் ..பாதி கைலே இருக்கும்..அப்றம்,சர்பத் பாட்டில எடுத்து..அதே ஸ்பூன்ல மூணுல தடவ bottleக்குள்ள ஊத்தி. அந்த ஒயின் கலர் liquid ..ice flakes ஓட சேந்து ஒரு texture வரும்.....வாயில ஜொள்ளு.. அப்றம் லெமன்அ கட் பண்ணி ..கைல புழிஞ்சி ..பக்கத்துல இருக்கிற பானைல.....அதுக்குன்னு வெச்சிருக்கற ஒரு டம்ளர உள்ள விட்டு முக்கா கிளாஸ் தண்ணிய ஊத்தி... கரண்டிய கண்ணாடி குள்ள விட்டு Stirrrrr..
சந்துலேந்து ஒரு ரோஸ் கலர் ஸ்ட்ரா எடுத்து glass குள்ள போட்டு குடுக்க...
உச்சி வெயில ஒரு பார்வ பாத்துட்டு...ஒரு Sip ...." Ye Dil maange more "...
அப்பாடி...
--> to be ctd
Comments
Post a Comment